search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகைகள் கைது"

    விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது நடிகைகளை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் பணி ஓய்வுபெற்றுள்ளார். #DSPRajendran
    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனராக விஜயகுமார் பணியாற்றிய 2002-2003 கால கட்டத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் என்.பி.ராஜேந்திரன்.

    குற்றங்களை தடுக்கும் பொருட்டு விபசாரத்தை முழுமையாக ஒழிக்க விஜயகுமார் உத்தரவிட்டதின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஏராளமான நடிகைகளை கைது செய்து கோடம்பாக்கத்தை கலக்கி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இவரது அதிரடி ‘ரெய்டில்’ நடிகைகள் மாதுரி, புவனேசுவரி, வினிதா, சாய்ரா பானு, ஸ்ரீ, சுவேதா, சோனா லட்சுமி உள்ளிட்ட பலர் பிடிபட்டனர். இவர்கள் அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    இது தவிர பாம்பே நாகேசுவரராவ், விக்கி, ராயப்பேட்டை சுரேஷ், டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசன், ஐதராபாத் பிரசாத் ஆகிய விபசார புரோக்கர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    இவரை கார் ஏற்றி கொல்லவும், கத்தியால் குத்தி கொல்லவும் முயற்சிகள் நடந்ததால் கமி‌ஷனர் விஜயகுமார் இவருக்கு துப்பாக்கி வழங்கி பாதுகாப்பு கொடுத்தார்.

    விபசார தடுப்பு பிரிவில் இருந்த காலகட்டத்தில் மட்டும் 2015 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். 100-க்கும் மேற்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார்.

    அதன் பிறகு சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி கொலை வழக்குகளை திறமையாக துப்பு துலக்கினார்.

    அசோக்நகர் பகுதியில் பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களை இரவு காலால் மிதித்து சாகடித்த ‘சைகோ’ கொலையாளிகள் 7 பேர்களை திறமையாக துப்பு துலக்கி கைது செய்தார். ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

    இதற்காக இவருக்கு 2012-ம் ஆண்டு ஜனாதிபதியின் மெச்சத் தகுந்த காவலர் பதக்கம் கிடைத்தது.

    மேலும் தமிழக காவல் துறையில் சிறப்பாக பணி செய்த காவலர்களுக்காக வழங்கப்படும் மெச்சத் தகு பதக்கமும், கோட்டூர்புரத்தில் முதன் முதலாக ராஜேந்திரனுக்கு வழங்கப் பட்டது.

    கணவன்-மனைவியை கொலை செய்த சாகசகாரி சங்கீதாவை கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தது மட்டுமின்றி நந்தனம் தேவர் சிலை முன்பு சுரேகா என்ற பெண்ணை கடத்தி கற்பழித்த கும்பலையும் திறமையாக கண்டுபிடித்தார்.

    கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்துக்கு கட்டிடம் கட்ட அண்ணா பல்கலைக் கழகத்தில் பேசி இடம் வாங்கி கொடுத்தது மட்டுமின்றி வெள்ளத்தில் கோட்டூர்புரம் மிதந்த போது ஏராளமான பொதுமக்களை நீரில் சென்று காப்பாற்றியவர். திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் 3 போலீஸ் நிலையங்களுக்கும் இடம் வாங்கி கொடுத்தவர்.

    மதுராந்தகம் பகுதியில் உள்ள கடப்பாக்கம் குப்பத்தில் 2 மீனவ கிராமங்களின் மோதலை தடுத்ததுடன் 52 பேர்களை கொலை வழக்கில் கைது செய்து பதட்டத்தை தணிய வைத்தவர் ராஜேந்திரன்.

    காவல் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, அதிக மெடல்களை பெற்று மக்களுக்கு எண்ணற்ற மனித நேய சேவை செய்த மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் இப்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு சோத்துப்பாக்கத்தில் 12-ந் தேதி பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. #DSPRajendran
    ×